Skip to main content

அந்த கால ஒழுக்க பாடம்


நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே
கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே
மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே
எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே
குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே
தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே
எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே
என்ன அழகான வரிகள்
இதை நம் குழந்தைகளுக்கு
சொல்லி கொடுக்கலாமே
Thanks  
From Facebook post

Comments

Popular posts from this blog

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்... 🌝  புற்று கண்டு கிணறு வெட்டு 🌝  வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய் 🌝  காணி தேடினும் கரிசல் மண் தேடு 🌝  களர் கெட பிரண்டையைப் புதை 🌝  கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி 🌝  நன்னிலம் கொழுஞ்சி 🌝 நடுநிலம் கரந்தை 🌝 கடை நிலம் எருக்கு 🌝  களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை  🌝 நம்பி வாழ்ந்தவனும் இல்லை 🌝  புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு 🌝  குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை 🌝  ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும் 🌝  கூளம் பரப்பி கோமியம் சேர் 🌝  ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 🌝  காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்  🌝 🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 🌝  தை மழை நெய் மழை 🌝  கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை 🌝  பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு 🌝  ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் 🌝  கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும்.  🌝  அடர விதைத்தால் போர் உயரும் நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை. அன்புடன் உங்கள் விவசாய நண்பன்